இறந்துபோன இந்து சகோதரரின் இறுதிச்சடங்கை, முன்னின்று நடத்திய முஸ்லிம்கள்
இந்தியா - அடிக்கடி மத மோதல்கள் நடைபெறும் ஐதராபாத் நகரில், இந்து ஒருவரின் உடலை, இந்து முறைப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ள தேவையான நிதியுதவியை வழங்கிய முஸ்லிம்கள், முன்னின்று அந்தச் சடங்குகளையும் செய்துள்ளனர்.
ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவ்வப்போது மோதல் நடைபெறுவது வழக்கம். அங்குள்ள, இந்திராம்மா நகர் என்ற இடத்தை சுற்றிலும் முஸ்லிம்கள் வசிக்க, நடுவே, பாலராஜு, என்ற, இந்து எலக்ட்ரீஷியன் வசித்து வந்தார்.இரண்டு நாட்களுக்கு முன், வேலையிலிருந்து வீடு திரும்பியவர், படுக்கையில் சாய்ந்தார்; மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. அவர் மனைவி சுபத்ராவும், 18 வயது மகள் ரேவதியும் அவரை எழுப்பிய போது, இறந்திருந்தது தெரிய வந்தது.
இறுதிச்சடங்குகள் மேற் கொள்ள பணம் இல்லாமல் தவித்த சுபத்ராவுக்கு, அண்டை வீட்டாரான முஸ்லிம்கள், பணம் கொடுத்து உதவியுள்ளனர். இறந்த எலக்ட்ரீஷியனுக்கு நெருங்கிய உறவினர்கள் இல்லாததால், அவரின் உடலை, இந்து முறைப்படி தகனம் செய்ய, முஸ்லிம் இளைஞர்கள் துாக்கிச் சென்றனர்.அவர்கள் முன், எலக்ட்ரீஷியனின், மகள், ரேவதி, தீச்சட்டியை துாக்கிச் சென்று, தந்தைக்கு இறுதிச் சடங்கையும் செய்தார். பிற அனைத்து சடங்குகளையும், முஸ்லிம் இளைஞர்கள் முன்னின்று நடத்தினர்.
Post a Comment