கெசினோ சூதாட்ட சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்த தீர்மானம் - அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா
கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை மீண்டும் மீளாவுக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நேற்றிரவு கெசினோ சட்டமூலத்தை மீளபெற தீர்மானித்துள்ள அறிவித்திருந்தது.
கொழும்பில் கெசினோ சூதாட்ட மையங்களை அமைப்பது குறித்து அரசாங்கம் நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை முன்வைக்க தீர்மானித்திருந்தது.
இதன்படி, எதிர்வரும் 24 ஆம் திகதி கெசினோ சட்டமூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது.
எவ்வாறாயினும், மூலோபாய அபிவிருத்தி சட்டமூலம் அடங்கிய வர்த்தமானி அறிவித்த பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment