நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசுபடுவதே காரணம் - உலக சுகாதார மையம்
நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசுபடுவதே காரணம் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
நுரையீரல் புற்று நோயினால் ஆண்டுக்கு 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்ற தகவல் 2010–ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. எனவே சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி கழகம் இந்த நோய் எதனால் ஏற்படுகிறது. என கண்டறிய சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
அதன் ஆய்வறிக்கை 5 கண்டங்களை சேர்ந்த 1000 நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பெரும்பாலானவை காற்று மாசுபடுவதே நுரையீல் புற்று நோய் வர காரணம் என தெரிவித்துள்ளது.
தற்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. அதில் இருந்து வெளியாகும் ரசாயன நச்சு கழிவுகள் காற்றில் கலக்கின்றன. அவற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.
காற்றில் பரவியுள்ள மாசுவே இந்த புற்று நோய் ஏற்பட தூண்டுகோலாக உள்ளது. காற்றின் மாசு நுரையீரலை மட்டுல்ல இருதயத்தையும் பாதித்து அங்கும் பலவித நோய்களை உருவாக்குகிறது.
தொழிற்சாலைகள் பெருகி வரும் நாடுகளில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் நுரையீரல் புற்று நோய் ஏற்பட காற்று மாசுபடுவதே காரணம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
புகையிலை மற்றும் அல்ட்ரா நீல கதிர்களாலும் நுரையீரல் புற்று நோய் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment