பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா..?
(எம்.எம்.ஏ.ஸமட்)
பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? என நுகர்வோர் அங்கலாக்கின்றனர்.
இது குறித்து கிழக்கின் நுகர்வோர் குறிப்பிடுவதாவது,
கிழக்கின் சில உள்ளுர் கடைகளில் பால்மா கொள்வனவுக்கு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
400 கிராம் பால்மாவின் விலை 70 ரூபாவினாலும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 120 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதால் பால்மாவுக்கு இச்செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுள்ளதாக கடை உரிமையாளர்கள் குறிப்பிடுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்நிலைமையின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பணிப்பாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.
Post a Comment