புலமைப் பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளி - மகனுக்கு சூடுவைத்த தந்தை கைது
(vi) இம்முறை தரம் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் குறைவாக புள்ளிகளை பெற்ற மகனுக்கு சூடுவைத்த தந்தையொருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று முன் தினம் இரவு 8.00 மணியளவில் தந்தையார் தனது மகனுக்கு இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார்.
சந்தேகநபரின் மகன் பொகவந்தலாவ தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பதுடன் அவர் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் 92 புள்ளிகளை பெற்றதன் காரணமாகவே மகனின் கால் மற்றும் முகத்திலும் சந்தேகநபர் சூடு வைத்துள்ளார்.
சிவதர்ஷன் என்ற 10 வயதான குறித்த சிறுவன் தந்தை சூடு வைத்ததையடுத்து வலி தாங்க முடியாமல் கதறியுள்ளான். சிறுவனின் சத்தத்தை கேட்ட அயலவர்கள் உடனே இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொகவந்தலாவ பொலிஸார் நேற்று குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சிறுவன் தற்போது பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேகநபரை இன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த புலமை பரீட்சை மாணவர்களை படிகுல்குளிக்குள் தள்ளும் ஒரு பாரிய திட்டம் என்று கூறுவது மிகவும் சரியானது.
ReplyDeleteநாங்கள் படிக்கின்ற போது யாரும் இந்த பரிட்சையை அலட்டிக்கொள்ளாமல் தான் இருந்தார்கள். எப்போது ஐந்தாம் ஆண்டு புலமை பரிட்சைக்கு சிறிய இந்த மாணவர்களை கசக்கி பிழிந்து இரவு' பகலாக டியூஷன் வகுப்புகள் என்று வருத்தி அடித்து தண்டனை கொடுத்து பாஸ் பண்ண வைப்பெதனால் எதை சாதிக்க போகிறார்கள் என்பது புரியாத புதிர். பிள்ளைகளை நன்றாக விளையாட விட்டு அவர்களுடைய ஆரோக்கியத்தை வளர்த்து கல்வியறிவை கொடுங்கள், பரிட்செயில் பெயில் ஆன மாணவர்கள் என்ன முட்டாள்களா? சின்னஞ்சிறு மாணவர்களின் எதிர்கால கனவுகளை இந்த படிப்பு முறை தகர்த்துவிடும்.
பரீட்சையில் தேற்றினால் மட்டும்தான் பிள்ளையா முட்டாள்
ReplyDelete