Header Ads



மட்டக்களப்பில் சீல் பண்ணப்படாத தராசுகளை கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பம்



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முறையாக சீல் பண்ணப்படாத தராசுகளை உபயோகிக்கும் வர்த்தகர்களின் தராசுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. வர்த்தக நிலையங்கள் உட்பட அங்காடி நிலையங்கள் என்பவற்றில் இதுவரையில் முறையாக சீல் பண்ணப்படாத தராசுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.

இதற்கமைவாக நேற்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி அங்காடி விபாயாரிகள் சந்தையில் முறையாக சீல் பண்ணப்படாத தராசுகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் குறிந்த சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கையில்,

வழமையாக ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு செயலகத்திலிருந்து அதிகாரிகள் வந்து இந்த தராசுகளுக்கு சீல் பண்ணும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் பொதுவாக ஆறாம் மாதம் அளவில் வருகை தரும் அதிகாரிகள் இதுவரையில் வந்து சீல் பண்னும் வேலைகளை செய்யாததுடன் எதுவித அறிவித்தலுமின்றி திடீரென பொலிஸாரினால் தராசுகள் கைப்பற்றப்பட்டு வருவதாக அங்காடிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் நேற்று தராசுகள் கைப்பற்றப்பட்ட வியாபாரிகளின் வியாபார நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்திருந்ததாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.