தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது, பெற்றோல் ஊற்றி தீவைப்பு
கலேவெல பொலிஸ் பிரிவில் கலகிரியாகம பிரதேசத்தில் வசிக்கும் தூங்கிக் கொண்டிருந்த குடும்பப் பெண், அவரது தாய் மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரால் பெற்றோல் ஊற்றி இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (21) அதிகாலை 01.45 அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதை அடுத்து கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பப் பெண், அவரது தாய் மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய கலேவெல பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். adt
Post a Comment