சிறுவர் துஸ்பிரயோகம் வீடுகளில்தான் அதிகம் இடம் பெறுகின்றது
(யு.எம்.இஸ்ஹாக்)
சிறுவர் துஸ்பிரயோகம் வீடுகளில்தான் அதிகம் இடம் பெறுகின்றன வீடு என்று கூறுகின்ற போது பெற்றோர்களும் உறவினர்களுமே இதன் பங்காளிகளாக மாறுகின்றனர் என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்தார் .
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்த உலக சிறுவர் தின நிகழ்வு சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் நௌபல் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,
சிறுவர்களை எந்த காரணம் கொண்டும் பீடி.சிகரட் வாங்குவதற்கு கடைக்கு அனுப்புவதை பெற்றோர்கள் குறிப்பாக தகப்பன்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடைக்கு செல்வதற்கு மறுக்கின்ற பிள்ளைகளுக்கு தண்டனை வழங்குகின்ற பெற்றோரும் உள்ளனர்.
சிறுவர்களாகிய நீங்கள் எந்த காரணம் கொண்டும் உங்களுடைய பெற்றோருக்கு பீடி,சிகரட் வாங்குவதற்கு உதவி செய்யக் கூடாது என அவர் சிறுவர்களைப் பார்த்து கூறினார். அதனையும் மீறினால் நீங்கள் பொலிசாருக்கு தெரியபடுத்துங்கள் . மது பாவனை உள்ள இடங்களில்தான் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம் பெறுகின்றன .
புகைத்தல் மற்றும் மது பாவை உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்தி நிவாரண முத்திரையை மீளப் பெற்றுக்கொள்ளும் திட்டமொன்றை கொண்டுவரவுள்ளேன். என பிர தேச செயலாளர் நௌபல் கூறினார்
நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.ஏ.அலியார்,கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா உட்பட பெற்றோர் பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment