ஆசிரியர் தின கவிதை
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
ஏணியாய் நின்று உன்னை
ஏற்றிவிட்ட குருமாரை மறவாதே
தேனீ தேன்சேர்ப்பது போலல்வா
தரமாக தாம்சேர்ந்த கல்வியையுமக்களித்தனர்
ஞானியாக நீ கல்விக்கடலைத் தாண்ட
தோணியாய் நின்றோர் குருவென்றால் மிகையில்லை
கூனிக்குறுகி நடந்துகொள்
கருணையுள்ள உன் குருவைக்கண்டால்
தீனி பலவருடம் குருவுக்கு கொடுத்தாலும்
தேனாய் அவர்தந்த கல்விக்கு ஈடேது
கோணிமட்டும் நடந்திடாதே
குருசாபம் பொல்லாதது பொல்லாதது
குவலயத்தில் பணிசெய்வோரில்
கறைபடியாக் கரமுடையவர் குருவே
காசுக்கட்டுகளை அவர் எண்ணுவதில்லை
கையிலிருப்பதோ வெண்கட்டித்துகள்
தன்னை அழித்து தாரணிக்கு ஒளிதரும்
மெழுகுவர்த்தியாய் மெல்லக் கல்வி தருவாரிவர்
வருடம் முழுதும் அவர் உழைத்திடினும்
சில நூறு ரூபாய்கள்தான் சம்பளவேற்றம்;;.
இருபதாம் திகதிகளை இவர்நேசிப்பதில்லை
இருக்கும் கடனை இறுப்பதெப்படியென்ற கவலை
சம்பளவேற்றத்தைப் பெற இவர்படும்பாடு
சகிக்கவே முடியாது
சாதாரண மனிதராய்
பதவியுயர்வுக்காய் பாரிய யுத்தமே
புரிய வேண்டும். கல்வி அதிகாரிகளுடன்
என்றும்
ஸ்கீமென்றும், லெசனென்றும், எஸ்பியே என்றும்,
அவர்படும் பாட்டுக்கும் - அதிகாரிகளின்
ஆட்டுதலுக்கும் அவர்பெறும் வேதனமோ
போதாது. பைசிக்கலை பரிபாலிக்கவே
அவரால் முடிவதில்லை. அவரின்
சம்பளத்தை சரியாய் உயர்த்துங்கள்
சர்க்கார் தரப்பினரே
Post a Comment