தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவர பொதுபல சேனா கோரிக்கை
தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் வரலாற்றுப் பொக்கிஷங்களை அழித்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எமது மரபுரிமைகளை பாதுகாக்கும் ஆற்றல் தொல்பொருள் திணைக்களத்திற்கு கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சில ஊழல் மோசடி மிக்க தொல்பொருள் அதிகாரிகள், வரலாற்றுப் பொக்கிஷங்களை அழிக்கும் தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். gtn
Post a Comment