வின்ஸிஸ் நெட் வேர்க் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
வின்ஸிஸ் நெட் வேர்க் ஒழுங்கு செய்திருந்த ” இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் ” எனும் தொனிப் பொருளிலானான இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் இலகுவாக தொழில் வாய்ப்பினை அல்லது சுயதொழிலினை மேற்கொள்ளும் வகையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் பயிற்சிக் கருத்தரங்கொன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளர் மேஜர் பேர்டி பெரேரா பிரதம அதிதியாகவும் , அட்டாளைச்சேனை பிரதேச சபை உதவி தவிசாளர் எஸ்.எல்.முனாஸ் , வின்ஸிஸ் நெட் வேர்க் பணிப்பாளர் சியாம் ஆப்தீன் , சாய்ந்தமருது இளைஞர் வளநிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் , ஓய்வுபெற்ற சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.ஐ.ஏ.ஜப்பார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேரந்த இளைஞர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
Post a Comment