அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் 'ஆசிரியர் பிரதீபா பிரபா விருது' பெறுகிறார்
செயற்றிட்டத்திற்கு ஏற்ப எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மாணவர் பரம்பரை ஒன்றை இலங்கையில் உருவாக்கும் முகமாக உயிர்ப்பான வகுப்பறை ஒன்றை நிர்மானித்து; அதனுள் மிகப் பயனுள்ள கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை முன்னெடுக்கும், ஆசிரியர் அதிபர்களினால் ஆற்றப்படும் அளவிலா சேவையினை கௌரவித்து வருடா வருடம் கல்வியமைச்சினால் நடாத்தப்படும் “ஆசிரியர் பிரதீபா பிரபா விருது” இவ்வருடம் 2013.10.05 சனிக்கிழமை அன்று, மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் வழங்கப் படவிருக்கிறது.
இதில், தண்டிப்பைத் தள்ளி அழகு கண்டிப்பால் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்தியவரும், மாணவநேய அதிபருமான, எமது அதிபதி, எம்.எல்.எம். சஹாப்தீன், அவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது. இது கல்வி அமைச்சின் செயலாளரால் எம் அதிபருக்குப் பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வமான கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப் பிரதீபா பிரபா விருது வழங்கப்படுவதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற தகைமைகள் பின்வருமாறு,
கடந்த 5 ஆண்டுகாலத்திற்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட விடுமுறைகள்,
குறுங்கால விடுமுறைகள்,
பாடசாலைக்கு தாமதமாக வந்த நாட்கள்,
கற்பித்த பாடங்களில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள்,
பாட இணைச்செயற்பாடுகள்,
பாடசாலைச் சங்கங்களில் பங்கேற்பு,
பங்கேற்ற ஆசிரிய சேவைக்கால அமர்வுகள்,
பாடசாலையில் செய்யப்பட்ட விசேட செயற்றிட்டங்கள் ஆராய்ச்சி மற்றும் ஆக்கங்கள்
எம் அதிபரின் சேவைகள் இன்னும் ஓங்கவும், மேலும் நல்விருதுகள் பெறவும் வாழ்த்தும் ஆசிரியர்களும், மாணவர்களும், நிர்வாக உத்தியோகத்தர்களும்.
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி ஊடகப்பிரிவு
He is deseve d for this reword,congrat.
ReplyDeleteMIM.சஹாப்தீன் அதிபர் அவர்கள் அக்/அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் முதல்வராக 1999 களில் பதவியேற்றதிலிருந்து (அதாவது என் மாணவப் பராயத்திலிருந்து),இன்று வரைக்கும் அன்னாரது ஆளுமையின் பால் ஈர்க்கப்பட்டவனாகவே இருக்கிறேன்.
ReplyDeleteநிர்வாகத் திறன் என்றால் என்னவென்பதற்கு உதாரண புருஷன் இவர்தான்.
சிரேஷ்ட மாணவத் தலைவனாக இருந்த காலங்களில் இவரால் ஆற்றுப்படுத்தப்பட்ட நான்,கற்றுக் கொண்டவையும் ஏராளம்.
வெறும் கற்களாக மட்டுமே இருந்த என் போன்ற பலரை தட்டித்தட்டி சிற்பங்களாக மாற்றிய பெருமை இவரையும் சாரும்.
என்னைப் பொறுத்த வரை'பிரதீபா பிரபா'விருது இவருக்கு வழங்கப்படுவது,அதற்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்பது தான்.
இவரின் சேவை இன்னும் வேண்டும் எம் சமுகத்திற்கு......
'வாழ்க நீடூழி'
இவன்,
MNAM FARHAN,
Peoples Bank Representative for Western province of Kingdom of Saudi Arabia.
mashallah ..............
ReplyDeleteI am delighted to read the award, given to my respected teacher Mr MIM Shabdeen(Ansar Sir) who indeed deserves this knighthood. However I wonder whether my comment ever be published by yourself as none of previous comments published by yourself for reasons not known to me.
ReplyDeleteMohamed Sameem Aboosalih LLB (Colombo) LLM(England) & Attorney-at-Law
One machine can do the work of many ordinary man, but no machine can do the work of one extraordinary man. Leadership isn't a skill, it's a talent! Happy im so happy ....
ReplyDeletebest wishes from my Heart !!
Allah ll bless u always ,,,,
Umar Rouhullah
Ad coops (Store keeper) Abu dhabi UAE