புவி றஹ்மத்துல்லாஹ் விடுதலையானார்..!
(tm) காத்தான்குடியை மையமாகக்கொண்டு வெளியிடப்படும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மத்துல்லா இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா இருப்பதாக தெரிவித்து புவி றஹ்மத்துல்லாஹ்வின் வீட்டை பொலிஸ் மோப்ப நாய் மூலம் காத்தான்குடி பொலிஸார் இன்று தேடுதல் மேற்கொண்டனர். இதன்போது கஞ்சா கட்டொன்று அவரின் வீட்டு வளாகத்திலிருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனால் புவி றஹ்மத்துல்லாஹ் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிகுடி சுற்றல்லா நீதிமன்றில் பதில் நீதவான் பிரேம்நாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.இதன்போது இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் புவி றஹ்மத்துல்லாஹ் விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை நவம்பர் 26ஆம் திகதி வரை பதில் நீதவான் ஒத்திவைத்தார். எவ்வறாயினும் புவி றஹ்மத்துல்லாஹ் வீட்டில் கஞ்சா இருக்கவில்லையெனவும் புவி புவி றஹ்மத்துல்லாவை கைது செய்வதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் எனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
IS THIS THE SAME RAHMATHULLA WHO USED PUT COMMENTS HERE.
ReplyDeleteசகோதரர் நிசார் அவர்களின் கேள்வியை நானும் கேட்கிறேன். இதற்கு ஜப்னா முஸ்லிம் பதில் தரவேண்டும்.
ReplyDeleteசகோதரர் நிசார் அவர்களின் கேள்வியை நானும் கேட்கிறேன். இதற்கு ஜப்னா முஸ்லிம் பதில் தரவேண்டும்.
ReplyDelete