அக்கரைப்பற்று - மீனோடைக்கட்டு பிரதேசத்தில் விபத்து - ஒருவர் மரணம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசத்துக்குற்பட்ட அட்டாளைச்சேகை மீனோடைக்கட்டு பிரதேசத்தில் EP NA 9398 பஸ்ஸும் EP YL 5709 ஆம் இலக்க முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூவரில் ஒருவர் மரணித்துள்ளார். விபத்துக்குள்ளான இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆவணத்தின் படி முச்சக்கர வண்டி சாய்ந்தமருது பிரேதசத்துக்கு உரியதென அடையாளம் காணப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிசார் சம்பவ இடதிற்கு வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தினால் அங்கு பெரும் வாகன நெரிசல் காணப்படுகின்றது.
Post a Comment