மாற்றுமத அன்பர்களுக்கான சிங்கள மொழி மூலமான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி
இஸ்லாம் பற்றி மாற்று மத அன்பர்களிடம் இருக்கும் கசப்புணர்வுகளை நீக்கி, மத நல்லிணக்கத்தை உண்டாக்கும் விதமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற தலைப்பில் இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாயுள்ள சகோதரர்களுக்காக நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 06 ம் திகதி பி.ப 2.00 மணி முதல் 06 மணி வரை பண்டாரவெல நகரசபை மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?
முஸ்லிம்கள் மாத்திரம் தான் ஆயுதம் ஏந்தி போராடுகின்றார்களா?
இஸ்லாம் பெண்களுக்கு உரிமை வழங்கவில்லையா?
பெண்கள் உடலை மறைத்து ஆடை அணிவது ஏன்?
குர்ஆன் மற்ற மதத்தினரை தூற்றுகின்றதா?
கொலைக்குக் கொலை என்ற தண்டனை ஏன்?
உணவில் எச்சில் துப்பிவிட்டுத்தான் மற்ற மதத்தவர்களுக்கு முஸ்லிம்கள் உணவு கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் போதிக்கின்றதா?
இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்பது உண்மையா?
போன்ற இஸ்லாம் மீது வைக்கப்படும் எந்தக் குற்றச்சாட்டுக்களானாதும் இனிய முகத்துடன் கூடிய, கனிவான பதில்கள் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கு வித்திடும் இந்நிகழ்ச்சிக்கு உங்களுக்கு தெரிந்த மாற்று மத அன்பர்களையும் அழைத்து வாருங்கள்.
இஸ்லாம் பற்றிய மாற்றுமத அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார் சகோதரர் அப்துர் ராசிக் B.COM (செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்) அவர்கள்.
சிங்கள மொழி மூலம் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை மற்ற சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பண்டாரவெல கிளை.
தொடர்புக்கு :
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.
TP : 0112677974, 0774781471, 0774781473, 0779481767, 0771081996,
Post a Comment