டிக்கெட் எடுக்காமல் விமானத்தில் பயணம் செய்த 9 வயது சிறுவன்
அமெரிக்காவில் 3 அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி 9 வயது சிறுவன் ஒருவன் டிக்கெட் எடுக்காமல் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விமான பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
அமெரிக்காவின் மின்னபோலிஸ் உள்ள செயின்ட் பவுல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாஸ் வேகாஸ் விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று நேற்று காலை 10.30 மணி அளவில் புறப்பட்டது. வழக்கம் போல் அங்கு பயணிகள் 3 அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விமானத்தில் ஏறினர். விமானம் 11.15 மணிக்கு லாஸ் வேகாசை சென்றடைந்தது. அதற்கு முன்னதாக நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான பயணிகள் கண்காணிப்பாளருக்கு, விமானத்தில் பயணம் செய்த சிறுவன் மீது சந்தேகம் வந்தது. பயணிகளின் டிக்கெட்டை சோதனை செய்த போது டிக்கெட் எடுக்காமல் 9 வயது சிறுவன் விமானத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர் உடனடியாக சிறுவனை பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் டுவின் நகரத்தில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், ‘முடிந்தால் என்னை பிடித்து பார்’ என்ற டிகாபிரியோ நடித்த திரைப்பட பாணியில் 3 அடுக்கு பாதுகாப்பை தாண்டி விமானத்துக்குள் நுழைந்துள்ளான்.
இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது அதில் சிறுவன் ஊடுருவியது பதிவாகி உள்ளது. ஆனால் கடந்த 15 வருடங்களில் இதுதான் முதல் முறை. சிறுவன் எப்படி உள்ளே நுழைந்தான் என்பது ஆச்சரியமாக உள்ளது என்றனர்.
அவனது பெற்றோரிடம் விசாரித்த போது நேற்று முன்தினம் திடீரென அவன் வீட்டை விட்டு வெளியே சென்றான். அதன்பின் திரும்பவில்லை. அவனை காணாமல் தேடி கொண்டிருந்தோம். குழந்தைகள் காவல் பிரிவுக்கும் தகவல் தெரிவித்திருந்தோம் என்றனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் விமான பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.
world best police, american security, long live cartoon world.
ReplyDelete