அமெரிக்காவில் 8வது நாளாக பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது
அமெரிக்காவில் 8வது நாளாக பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா எதிர்கட்சிகளிடம் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஒபாமாவின் சுகாதார நலத்திட்டத்திற்கான மசோதாபற்றி வாக்கு எடுப்பு நடத்தவும் சந்தேகங்களை வெளிப்படையாக பேசி தீர்க்கவும் பேசுவார்த்தைக்கு வர அழைத்துள்ளார். இது குறித்து குடியரசு கட்சியின் டெக்சாஸ் மாநில செனட் உறுப்பினர் ஜான் கார்ன் கூறுகையில், 'அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாவை அனுமதிப்பது குறித்து உடனடியாக அதிபருக்கு உறுதி எதுவும் அளிக்க முடியாது. அம்மசோதா நிறைவேற பல நிபந்னைகள் உள்ளன,' என்றார்.
Post a Comment