உலகின் 8வது சக்தி மிக்க மனிதராக மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ்
உலகின் அதிகாரம் மிக்க அரசியல் தலைவர்கள், கொடையாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல 'போர்ப்ஸ்' பத்திரிகை ஆண்டு தோறும் பட்டியலிட்டு வருகிறது.
இப்பத்திரிகையின் இந்த (2013) ஆண்டு பட்டியலின் படி உலகின் சக்தி வாய்ந்த 3வது பெண்மணியாக காங்கிரஸ் கட்சி மற்றும் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக பொறுப்பு வகிக்கும் சோனியா காந்தி (66) தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடைமுறையில் இந்தியாவின் தலைமை என்று சோனியா காந்தியை விவரித்துள்ள போர்ப்ஸ், உலகின் சக்தி மிக்க பெண்களில் 3வது இடத்தையும், உலகின் சக்தி மிக்க 72 தலைவர்களின் பட்டியலில் 21 இடத்தையும் அவருக்கு அளித்துள்ளது.
சென்ற (2012) ஆண்டு உலகின் சக்தி மிக்க தலைவர்களில் முதல் இடம் வகித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
முதல் இடத்தை தற்போது ரஷ்ய அதிபர் புதின் கைப்பற்றியுள்ளார்.
இந்த ஆண்டின் டாப் 10 பட்டியல்:-
1. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,
2. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,
3. சீன கம்யூனிஸ்ட் தலைவர் க்சி ஜின்பிங்,
4. கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்,
5. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்,
6. மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ்,
7. அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் பென் எஸ்.பெர்னகே,
8. சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்,
9. ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ டிராகி,
10. வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக்கேல் டியூக்.
முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியாத இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 11வது இடத்தில் நிற்கிறார்.
முதல் 100 வரிசையில் இடம் பெற்ற இதர இந்தியர்களாக பிரதமர் மன்மோகன் சிங் (28), முகேஷ் அம்பானி (38) தொழிலதிபர்கள் லட்சுமி மிட்டல் (51) ஆகியோர் உள்ளனர்.
அல்லாஹ்வின் பட்டியலில் இவர்களெல்லாம் கடைசியாக உள்ளார்கள்,
ReplyDeleteMr bawa appo neengal eththanayawathidathil
DeleteBrother Mohammed BAWA,
ReplyDeleteNo one knows the list of Allah ( it is hidden knowledge ), When you say like this,.. It seems you are aware of hidden knowledge ( May Allah forgive you for this words.)
Only Allah knows..his list.. .. If you, out of you hate toward some others, violate the basics of Islam... be careful.. Make Tawba before your last breath (that any time.)
Even on a Non believer, we can not decide his status with Allah, since He may turn to Allah at his last breath.
May Allah make us know our limits in beliefs, actions and speech ..
Servant of Allah
சகோதரர் Mohamed Bawa அவர்களே,
ReplyDeleteநாம் யாருக்கும் அல்லாஹ்வின் பட்டியல் தெரியாது, ஆகவே அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்த விடயத்தில் நாம் அத்துமீறி கருத்து சொல்லி வீண் பாவத்தை சுமந்து கொள்ளாமல் இருப்போம்.
இவர் நல்லவர் என்றோ, சிறந்தவர் என்றோ நான் சொல்ல வரவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர் முஹம்மது பாவா அவர்களே :
ReplyDeleteநீங்கள் அவசரப்பட்டு அவர்களெல்லாம் அல்லாஹ்வின் பட்டியலில் கடைசியில் உள்ளார்கள் என்று தவறாக சொல்லிவிட்டீர்கள்.
அதனால்தான் எல்லோருக்கும் கோபம் வருகிறது.
ஆகவே நண்பரே: அவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் பட்டியலில் வருவதற்கு தகுதியே இல்லாதவர்கள்.
காரணம் : பெருமை கொண்டோருக்கு இஸ்லாத்தில் இடமில்லை.
இஸ்லாம் என்பது எளிமையான மார்க்கம், எளிமையாக உள்ளவர்களே இஸ்லாத்தில் நுழைய முடியும். செல்வந்தர்கள் இஸ்லாத்தைக் கண்டால் வெருப்பார்கள். இது இறைவனுடைய வசனம். இதை அறிந்தோருக்குத்தான் இந்த விஷயம் என்னவென்று புரியும். குர்ஆனை தொடாதவர்களுக்கு இந்த விஷயம் விளங்காது.