Header Ads



நாடுபூராகவும் 856 (அரச) முஸ்லிம் பாடசாலைகள் (விபரம் இணைப்பு)

(ஏ.எல்.ஜுனைதீன்)

  நாடுபூராகவும் 856  ( அரச ) முஸ்லிம் பாடசாலைகள் செயல்படுவதாக கல்வி அமைச்சு இறுதியாக வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 148 முஸ்லிம் பாடசாலைகள் செயல்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையாக தலா ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலையாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் செயல்படுகின்றன.

  மாவட்ட ரீதியாக முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கை விபரம் வருமாறு:

 கொழும்பு          19              
 கம்பஹா           20
 களுத்துறை         20
 கண்டி              76
 மாத்தளை          22
 நுவரெலியா         9
 காலி               13
 மாத்தறை          13
 அம்பாந்தோட்டை    9
 யாழ்ப்பாணம்        1
 கிளிநொச்சி          1
 மன்னார்            32
 வவுனியா           11
 முல்லைத்தீவு         1
 மட்டக்களப்பு         70
 அம்பாறை           148
 திருக்கோணமலை    117
 குருநாகல்            78 
 புத்தளம்              53
 அநுராதபுரம்           62
 பொலனறுவை         16
 பதுளை               23
 மொனராகலை         5
 இரத்தினபுரி            7 
 கேகாலை             30

  நாட்டில் மொத்தமாக உள்ள 10118 அரச பாடசாலைகளில் 6826 சிங்களப் பாடசாலைகளும் 2223 தமிழ் பாடசாலைகளும் 856 முஸ்லிம் பாடசாலைகளும் செயல்படுகின்றன. 213 பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் புள்ளி விபரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.