இரவு 7.30-10 மணி வேளைகளில் மின்சார கட்டணம் அதிகம் அறவிடப்படுகின்றது
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
இரவு 07.30 மணி தொடக்கம் 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படுவதனாலேயே மின் பட்டியல் மாதாந்தக் கட்டணம் அதிகம் அறவிடப்படுகின்றது என இலங்கை மின்சார சபை காத்தான்குடிக் கிளை மின் பொறியியலாளர் எம்.ஏ.சீ.எம்.நௌபல் தெரிவித்தார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் 'சிக்கனமாக மின்சாரத்தை எவ்வாறு உபயோகிப்பது' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை மின்சார சபை மின்சாரத்தை அதிகமாக டீசலிலிருந்து பெறுகிறது.காற்று,நீர் என்பவற்றிலிருந்து பெறுவது மிகக் குறைவாகும்.இரவு வேளைகளில் 07.30-10.00 மணி வரையான காலப்பகுதியில் மக்கள் மின்சாரத்தை அதிகமாக பாவிப்பதனால் மின்சார சபைக்கு அதிகமாக டீசல் செலவாகிறது.இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வதற்காகவே மின்சார சபை மின்கட்டணங்களை அதிpகமாக அறவிடுகின்றது.
உங்களுடைய மின் கட்டணங்கள் குறைய வேண்டுமானால் நீங்கள் மின்சாரத்தை சிக்கமனாக பாவிக்க பழகிக் கொள்ளவேண்டும்.
விசேடமாக குறிப்பிடப்பட்ட நேரங்களில் தேவையின்றி மின்சாரத்தை பாவித்தல்,தொலைக்காட்சிப் பெட்டியை அனைக்கும் போது முழுமையாக அனைக்காமல் ரிமோட்டினால் மாத்திரம் அனைத்தல்,மின்சாரம் அதிகமாக பாவிக்கப்படும் நேரங்களில் சலவை இயந்திரம்,குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை உபயோகித்தல்,இயற்கையாக காற்று கிடைக்கின்ற வேளைகளிஇயற்கையாக காற்று கிடைக்கின்ற வேளைகளிம் மின்விசிறிகளை உபயோகித்தல் உள்ளிட்ட இவ்வாறான செயற்பாடுகளில் கவனமெடுத்து சிந்தனை செய்து மின்சாரத்தை பாவிக்கும் போது நிச்சயமாக மின்சாரக் கட்டணத்தை குறைத்துக் கொள்ளலாம்.
ஆகவே மின்பாவனையை கட்டுப்படுத்தி சிறப்பான வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளை தொண்டர் இணைப்பாளர் எம்.ஐ.சலீம்,மட்டக்களப்புக் கிளைத் தொண்டர் இணைப்பாளரும் முதலுவதிப் பயிற்றுவிப்hளருமான எஸ்.கணேஷ்,167சீ கிராம சேவகர் எம்.ரஊப் மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment