Header Ads



ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 70 இலங்கையர்களை கடற்படையினர் காப்பாற்றினர்

மாலைதீவுக்கும் இலங்கை கடற்பரப்பிற்கும் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 70 இலங்கையர்களும் கடற்படையின் அதிவேக படகு மூலம் காப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார்.

‘தினுஜ புத்தா’ என்ற மீன்பிடி படகில் இருந்த இவர்கள் முதலில் 65 பேர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இப்போது 70 பேர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் அனைவரும் வெளிநாடொ ன்றுக்கு செல்லும் நோக்கி லேயே இப்படகில் பயணித்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் 215 கிலோ மீற்றர் தொலைவில் 65 பேருடன் பயணித்த படகு தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3ம் திகதி பழுதடைந்ததாகவும், மூழ்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. உடனடியாக செயற்பட்ட இலங்கை கடற்படையினர் சாகர என்ற அதிவேக படகை ஸ்தலத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்படி கடற்படை கப்பல் குறித்த படகை அண்மித்து 70 இலங்கையர்களையும் மீட்டுள்ளது. நேற்று இரவு காலி துறைமுகத்துக்கு அனைவரையும் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

No comments

Powered by Blogger.