Header Ads



7 முதல் 13 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்

(எம்.எம்.ஏ.ஸமட்)

இம்மாதம் 7 முதல் 13 ஆம் திகதி வரையான காலப் பகுதியினை தேசிய டெங்கு ஒழிப்பு வாரமென  சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

இவ்வார நாட்களில் நுளம்புகள் பெருகுவததைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், டெங்குக் காய்ச்சல் மற்றும் நுளம்புகளினால் ஏற்படும் இதர நோய்கள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

வருடத்தின் ஜனவரி முதல் மார்ச் மற்றும் ஒக்டோபர் முதல் டிசம்பர் ஆகிய மாதங்களில் பருவ கால மழை பெய்வதால் இக்காலங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும். இது குறித்து மக்கள் கூடிய அக்கறை செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இவ்வான்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாத காலங்களில் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் 11,656 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப்பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இவ்வருடம் அதிகளவில் டெங்கு நோய்தாக்கத்துக்குள்ளானவர்களைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.