Header Ads



65 பேர் பயணித்த இயந்திர படகு விபத்து - மீட்பு பணிக்கு இலங்கை கடற்படை விரைவு

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையேயான கடற்பரப்பில் அனர்த்திற்கு உள்ளான படகை மீட்பதற்காக கடற்படையின் சாகர கப்பல் அனுப்பபட்டுள்ளது.

இதனை கடற்படை ஊடக பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு கடற்பரப்பின் 215 மைல் கல் தூரத்திற்கு அப்பால் “தினுஜ புதா” என்ற இயந்திர படகு அனர்த்திற்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

65 பேர் பயணித்த இந்த இயந்திர படகில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.