திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் 5ஆம் கட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பம்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் 5ஆம் கட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியில் பிரதான வைபவங்கள் நடைபெறவுள்ளதுடன் நாட்டிலுள்ள சகல கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலும் மரம் நடும் வைபவங்கள் சுபவேளையான முற்பகல் 10.11மணிக்கு இடம்பெறவுள்ளது.
பிரதேச செயலங்களின் ஒருங்கிணைப்புக்குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் பிரதேச அரசியற்பிரமுவர்களின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
Post a Comment