5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசாரணை நடத்த தீர்மானம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை, அந்த வயதுக்குரிய மாணவர்களுக்கு பொருத்தமானதா என்பது தொடர்பிலும், பரீட்சை நடத்தப்படும் முறைமை தொடர்பிலும் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தில் புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் நிபுணர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாட எண்ணியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையின் ஊடாக பிள்ளைகள் பாராட்டப்படுகின்றார் எனின், இந்த முறைமை எந்தளவு சிறந்தது, வினாத்தாள் தயாரிக்கப்படும் முறை பிள்ளைகளுக்கு பொருத்தமானதா?, புள்ளியிடும் முறை சரியானதா? என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் கூறியுள்ளார்.
அத்துடன் சிறுவர் உளநல வைத்தியர்கள், கல்வி விஞ்ஞானம் தொடர்பான நிபுணர்கள் குழுவொன்றும் இதற்காக அழைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. nf
Post a Comment