Header Ads



கல்முனை பிரதேச 5 ஆண்டு அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பது பற்றிய கலந்துரையாடல்


(ஏ.பி.எம்.அஸ்ஹர் + அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச செயலகமும் அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையமும் இணைந்து ஏற்பாடு செய்த செயலமர்வொன்று இன்று நடைபெற்றது.

கிரிஷ்டா இல்லத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதித்திட்மிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார் அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற  நிறுவனங்களின் இணைப்பாளர் எம்.ஐ.ஹபீல் உட்பட  அபிவிருத்தி உத்தியோகத்தர் கள் கிராம உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் வரும் 29 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளுக்குமான 5ஆண்டு அபிவிருத்தித்திட்டம் தயாரிப்பது சம்பந்தமாக விரிவாகக்கலந்துரையாடப்பட்டதுடன் முன் மொழிவுகளும் அடையாளங்காணப்பட்டன.



No comments

Powered by Blogger.