கத்தாரில் நேற்று ஆழ்துளை கிணற்றை சுத்தம்செய்த 4 பேர் வபாத்
அரபு நாடான கத்தார் தலைநகர் டோகாவில் நேற்று ஆழ்துளை கிணறை சுத்தம் செய்யும் பணியில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். அப்போது அவர்கள் ஆழ்துளை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக பலியானார்கள்.
போலீஸ் விசாரணையில் ‘பலியான 4 இந்தியர்களும் கேரள மாநிலத்தை சேர்ந்த இசாக் (வயது26), பாசில் (30), முனீர் (20) மற்றும் முகம்மது ஆகியோர்’ என்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் அந்த நாட்டில் தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர்
Post a Comment