Header Ads



மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தின் மூலம் 460 மில்லியன் ரூபா வருமானம்

ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தின் மூலம் இதுவரை 23,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 460 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம் 2012 ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் முதலாம் கட்டத்தில் 130 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப் பட்டது. 

இந்த மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் 55,000க்கும் அதிகமான வாகனங்கள் இறக்கப்பட்டதுடன் இந்த வாகனங்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த துறைமுகத்தின் மூலம் 23,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.