பஸ் தீ விபத்தில் 45 பேர் பலி
பெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து (ஜப்பார் டிராவல்ஸ்) ஒன்று பயணிகளை ஏற்றிக்கொன்டு நேற்று இரவு ஆந்திரப்பிரதேச தலைநகர் ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்றது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு அந்த பேருந்து ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் சென்று கொண்டிருந்தது. அப்போது சிறுபாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்தது.
உடனே டீசல் டேங்க் வெடித்து சிதறி பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். திடீரென ஏற்பட்ட இந்த திடீர் தீயில் சிக்கி பயணிகள் 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பேருந்து விபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயமடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் வருந்தம தெரிவித்துள்ளார்.
Post a Comment