Header Ads



பாடசாலைச் சிறார்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர், பார்வைக் கோளாறினால் அவதியுறுகின்றனர்

(எம்.எம்.ஏ.ஸமட்)

பாடசாலைச் சிறார்களில்; 4 லட்சத்து 50 ஆயிரம் பேர்; குறைந்த பார்வைக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இத்தகவலை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மகிபால தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பாடசாலை நலன் அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவம் நாரேஹன்பிட்டியிலுள்ள தேசிய குருதிச் சேமிப்பு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வைபவத்;தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட தகவலை வெளிப்படுத்தினார் குறிப்பிட்டார் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாடசாலைச் சிறார்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர்; குறைந்த பார்வைக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இவர்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் மிகச் சிறிதளவான பார்வைப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

'விசன் 2020' திட்டத்தினூடாக கண் பரிசோதனையின் பின்னர் இவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்;படவுள்ளதுடன் பழுதடைந்த மூக்குக் கண்ணாடிகளுக்குப் பதிலாக புதிய மூக்குக் கண்ணாடிகளும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இவ்வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னேடுப்பதற்கு  சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கமைய தேசிய கண் வைத்தியசாலை நிருவாகம் மூக்குக் கண்னாடிகளைத் தயாரிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

பார்வையில் குறைபாடு உள்ள 40 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு  'விசன் 2020' திட்டத்தினூடாக இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரவித்த அவர், 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் பார்வைக் குறைபாடற்ற சமுதாயமென்றை கட்டிnழுப்புவதே விசன் 2020 திட்டத்தின் இலக்காகவுமுள்ளதாக மேலும் குறிப்பிட்டார். 



No comments

Powered by Blogger.