Header Ads



நெல்சன் மண்டேலாவை கொல்ல சதி : 4 பேருக்கு 35 ஆண்டு சிறை


ஆப்ரிக்காவின் விடுதலைக்காக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை அமைத்து போராடியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக வெள்ளையர்கள் அவ ரை 20 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைத்தனர். உலக நாடுகளின் நெருக்கடிக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் அவர் 1994ல் அதிபரானார். 90களிலும், 2000மாவது ஆண்டுகளிலும் அவரை கொல்லவும், அவரது ஆட்சியை கவிழ்க்கவும் போய்ரிமாக் என்ற வெள்ளையர் விவசாய முன்னணி என்ற அமைப்பு சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழும்பின. இதற்காக அந்த அமைப்பு பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையும் அரங்கேற்றியது. இதற்கு அந்த அமைப்பினர் பொறுப்பேற்பதாகவும் அறிவித்தனர். 

அந்த கால கட்டத்தில் ஒருமுறை மண்டேலா லிம்போபோ மாகாணத்தில் உள்ள பள்ளியை பார்வையிட காரில் சென்ற போது, அவர் செல்லும் வழியில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பாக அந்த சதி முறியடிக்கப்பட்டு, மண்டேலா அந்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். இந்த கொலை முயற்சி தொடர்பாகவும் அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த அமைப்பை சேர்ந்த 20 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடை பெற்ற இந்த வழக்கில் நேற்று ஜோகன்னஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இதில் மண்டேலாவின் ஆட்சியை கவிழ்க்க சதி மற்றும் அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 4 வெள்ளையர்களுக்கு தலா 35 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஏபென் ஜோர்டான் உத்தரவிட்டார்.  வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போதே இரண்டு பேர் இறந்து விட்டனர். இந்த வழக்கில் பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர்களை, அவர்கள் ஏற்கனவே விசாரணையின் போதே சிறை தண்டனையை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.