Header Ads



மதுவுக்கு அடிமையாகி, 4 வயது மகன் இறப்புக்கு காரணமான தாய்க்கு 15 ஆண்டு சிறை

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி 4 வயது மகனின் சாவுக்கு காரணமான பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்ட் நகரில் வசிக்கும் ஒரு பெண் தனது வீட்டில் இருந்து நாள்தோறும் துர்நாற்றம் வீசும் காகிதங்களை வீதியில் போடுவதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரில் குறிப்பிடப்பட்ட அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த அமண்டா ஹட்டன் (45) என்பவரை இது தொடர்பாக விசாரித்தனர்.

குடிப்பழக்கத்துக்கு அவர் அடிமையாகி விட்டதால், சரியான கவனிப்போ, பராமரிப்போ இன்றி அவரது 4 வயது மகன் 2009-ம் ஆண்டு இறந்து விட்டான்.

2011 வரை அந்த பிணத்தை வீட்டினுள் மறைத்து வைத்திருந்த அந்த பெண், பிணத்தை துடைக்கும் காகிதத்தை தெருவில் வீசி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, ‘பல குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை மறந்து குடிப்பழக்கம் தான் முக்கியம் என்ற சுயநலத்தை கடைபிடித்த குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்குகிறேன்.

குழந்தைகளுக்கு போதுமான உணவூட்டி பராமரிக்கும் முக்கிய கடமையை குற்றவாளி சரிவர செய்யாததால் தான் அந்த 4 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

அது மட்டுமின்றி, அவன் இறந்த தகவலை மறைக்க பிணத்தை 2 ஆண்டுகளாக வீட்டினுள் பதுக்கி வைத்துள்ளார். அவன் அணிந்திருந்தது 6 மாத குழதைக்கான உடைகள் என்பதை வைத்து பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.