அதிபரை தாக்கிய 3 ஆசிரியைகள் - மாவனெல்லையில் சம்பவம்
மாவனெல்லை – வேகன்தலை மகாவித்தியாலயத்தின் அதிபர் மீது நேற்று பிற்பகல் பாடசாலை நிறைவின் போது 3 ஆசிரியைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அதிபர் பாடசாலையிலிருந்து வெளியேற தயாரான போது அவரின் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியைகள் மூவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
மாவனெல்லை – வேகன்தலை மகா வித்தியாலயத்தின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் ஒழுக்கயீனமான சில தினங்கள் செயற்பட்டமை காரணமாக குறித்த ஆசிரியைகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும், இதன்காரணமாக அவர்கள் மேலும் குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயற்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபராலும், 3 ஆசிரியைகளாலும் காவல்நிலையத்தில் 2 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவனெல்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் நிலவும் நிர்வாக முரண்பாடே சம்பவத்திற்கு காரணம் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக மாவனெல்லை வலய கல்விப் பணிப்பாளர் தெமலகிரியே அனோமதஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Post a Comment