Header Ads



இரு யானைக் குழுக்களிடையே மோதல் - அரசியல்வாதியின் மகன் உள்ளிட்டு 3 பேர் காயம்

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்காவை நீக்க ஒரு அணியும், அதனை எதிர்த்து இன்னொரு அணியும் இன்று மாத்தறை தேவினுவராவில் இருந்து ஆரம்பித்த  பாத யாத்திரைகளில் இரு அணிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் ஐக்கிய தேசியக் கட்சி தென்  மாகாண சபை முன்னால் உறுப்பினர் மைத்ரி குணரத்னவின் மகன் உட்பட மூவர் மாத்தறை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மாகாண சபை உறுப்பினர் ஷிரால் லக்திலக மற்றும் மைத்ரி குணரத்ன ரணிலுக்கு எதிராகவும், மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கலசமரவீர  உட்பட இன்னொரு குழுவினர் ரணிலுக்கு ஆதரவாகவும் இந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்துள்ளனர். 

No comments

Powered by Blogger.