புதிய கட்டுநாயக்க அதிவேகப் பாதையில், 3 நாட்கள் இலவசமாக பயணிக்கலாம் (வீடியோ)
(Mohamed Riswan)
எதிர்வரும் 28ம் திகதி திறக்கவிருக்கும் கொழும்பு - கட்டுநாயக அதிவேக பாதையை மூன்று நாட்களுக்கு இலவசமாக பொதுமக்கள் உபயோகிக்கலாமென துறைமுக மற்றும் பெரும்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் நிர்மலா கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இதன்படி 23.24.25ம் திகதிகளில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் இவ் வீதியில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறுமென அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பு கட்டுநாயக்க வரை செல்வதற்கு தற்போது உங்களுக்கு ஒரு மணித்தியாளதிற்கும் அதிக நேரம் செலவாகும்.
எனினும் இன்னும் ஒரு சில தினங்களில் 20 நிமிடங்களில் அந்தப் பயணத்தை நிறைவு செய்ய முடியும்.
குறித்த அதிவேக வீதிகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் 08-10-2013 ஊடகவியலாளர்களுக்கு கிடைத்தது.
Post a Comment