30 வருடங்களாக இருந்துவந்த போரை விட மிகவும் ஆபத்தான பிரச்சினை
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச முன்வைத்த போதைக்கு முற்றுப்புள்ளி என்ற மகிந்த சிந்தனை சரியாக நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை என மாதுளுவாவே சோபித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கும் என்றால் அவரால் போதைப் பொருள் பிரச்சினையை இல்லாதொழிக்க முடியும். போதைப் பொருள் பிரச்சினை காரணமாக நாட்டில் ஊழல், மோசடிகள், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இந்த பிரச்சினையானது இலங்கையில் 30 வருடங்களாக இருந்து வந்த போரை விட மிகவும் ஆபத்தான பிரச்சினையாகும்.
எனினும் மகிந்த சிந்தனையில் முன்வைக்கப்பட்ட போதைக்கு முற்றுப்புள்ளி சரியாக அமுல்படுத்தப்படவில்லை. இதனால் நாங்கள் முன்வைக்கும் இரண்டு உடனடியான யோசனைகைகளை அமுல்படுத்த வேண்டும். அதன்படி கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் 9 சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றை உடனடியாக தடைசெய்ய வேண்டும்.
அத்துடன் மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை அரசியல்வாதிகளே அதிகளவில் வைத்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக தீர்மானங்களை தேர்தல்களின் போது மக்கள் எடுக்க வேண்டும் என்றார்.
சொன்னவர்கள் செய்யாமல் இருப்பதற்குக்காரணம் அவர்களே ஒரு நாளைக்கு போத்தல் கணக்கில் குடிப்பதுதான். சுயனலம் எப்போ இல்லாமல் போகுதோ அன்றைக்குதான் நாட்டில் உண்மையான அபிவிருத்தியும் சக வாழ்வும் ஆரம்பிக்கும். சுயலாபத்திற்காகவே அரசியல் வாதிகள் அனைத்து மதுபான சாலைகளின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அரசுக்கு இதுவும் ஒரு வருமானம் என்பதால் இலகுவில் போதை ஒழிப்பை மேற்கொள்ளாது.
ReplyDelete