Header Ads



இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக எகிப்தில் 30 மில்லியன் கையெழுத்து

எகிப்து இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கையெழுத்து சேகரிக்கப் பட்டுள்ளது.

இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக கையெழுத்து வேட்டையை ஆரம்பித்திருக்கும் பாதில் (செல்லுபடியற்றது) பிரசார குழு நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக 30 மில்லியன் கையெழுத்துகளை சேகரிக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக இதுவரை 2.1 மில்லியன் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ சதிப்புரட்சியை முடிவுக்கு கொண்டு வந்து சட்ட பூர்வமான உரிமைக்கு ஆதரவளிப்போரின் உண்மையான எண்ணிக்கையை வெளிக்காட்டுவதே இந்த பிரசாரத்தின் குறிக்கோள் என அந்த அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.

இராணுவ சதிப் புரட்சிக்கு எதிரான பாதில் பிரசாரம் மூன்று வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.