Header Ads



30 ஆண்டுகளின் பின் புனித கஃபா பூட்டு மாற்றம்

(தினகரன்) புனித கஃபாவின் வாயில் பூட்டு 30 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளதை இரு புனித பள்ளிவாசல்களின் பொது தலைமையகம் உறுதி செய்தது. கஃபா கழுவப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வுக்கு பின் பூட்டு மாற்றப் பட்டுள்ளது.

‘சதின்’ என அழைக்கப்படும் சிரேஷ்ட கஃபா வாயில் காவலரான ஷெய்க் அப்துல் காதர் அல் ஷைபியிடம் பூட்டு கையளிக்கப்பட்ட தாக ‘அரப் நியூங்’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் குறித்த பூட்டு மாற்றப்பட்டது குறித்து தம்மை அறிவுறுத்தவில்லை என கஃபா சிரேஷ்ட வாயில் காவலர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காலஞ்சென்ற சிரேஷ்ட வாயில் காவலரான ஷெய்க் அப்துல் அkஸ் அல் ஷைபியின் பரிந்துரைக்கு அமையவே இந்த பூட்டு தயாரிக்க ப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கஃபா கழுவுதல், கிஸ்வா (போர்வை) மாற்றுதல், பூட்டு மாற்றுல் அல்லது ஏனைய விவகாரங்கள் குறித்து மக்கா ஆளுநர் கஃபாவின் பொது தலைமையகத்திற்கு அல்லாமல் வாயில் காவலரிடமே அறிவுறுத்த வேண்டும் என சிரேஷ்ட வாயில் காவலர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் இரு புனித பள்ளிவாசல்களினதும் பொது தலைமையகத்தின் பிரதானி அப்துல் ரஹ்மான் அல் சுதைசி புதிய வாயிற் பூட்டை ‘சதின்’ இன்றியே அவதானித்திருப்பதாகவும் சிரேஷ்ட வாயில் காவலரான ஷெய்க் அப்துல் காதர் அல் ஷைபி கூறியுள்ளார்.

புதிய பூட்டு 18 கெரட் தங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) புனித கஃபாவின் பூட்டை அவரது தோழரான உஸ்மான் பின் தல்ஹாவிடம் வழங்கப்பட்டது தொடக்கம் இன்று வரை மேற்படி இறைத்தூதரின் தோழரின் சந்ததியினரே சதின் பட்டத்தை பெற்று வருகின்றனர்.

இந்த வாயில் பூட்டு ஓர் ஆண்டில் இஸ்லாமிய நாட்காட்டியின் முஹர்ரம் மாதம் மற்றும் ஷஃபான் மாதத்தின் முதலாவது தினம் ஆகிய இரு தடவைகள் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது.

No comments

Powered by Blogger.