Header Ads



அமெரிக்காவில் இருந்து போதைப் பொருள் கடத்திய 2 விமானங்களை சுட்டு வீழ்த்திய வெனிசுலா ராணுவம்

மத்திய அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டின் வான் எல்லை வழியாக போதைப் பொருட்களை கடத்தி சென்ற 2 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக வெனிசுலா அறிவித்துள்ளது.

வெனிசுலா வழியாக போதைப்பொருட்களை கடத்தி செல்லும் விமானங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ கடந்த 2ம் தேதி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

இன்றிலிருந்து எங்கள் நாட்டின் வான் எல்லையின் மீது பறக்கும் மர்ம விமானங்களுக்கு முதலில் அமைதியான முறையில் தரையிறங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்த உத்தரவை மதிக்காத விமானங்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தப்படும் என போதைப்பொருள் கும்பல்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் எச்சரித்து இருந்தார்.

இந்த எச்சரிக்கையை மீறி கடந்த 19ம் தேதி நள்ளிரவிலும் 20ம் தேதி அதிகாலையிலும் வெனிசுலா வழியாக 2 போதைப் பொருள் கடத்தல் விமானங்கள் பறந்தன.

விமான நிலைய கட்டுப்பாடு அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் பறந்த அந்த 2 விமானங்களும் புயட்ரோ அயகுச்சோ பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் மத்திய அமெரிக்காவின் குவடெமலா பகுதியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது என ராணுவ தளபதி விளாடிமிர் பட்ரினோ நேற்று அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.