இந்த அரசாங்கத்தை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு தோற்கடிக்க முடியாது - பௌசி
(gtn) இந்த அரசாங்கத்தை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு தோற்கடிக்க முடியாது என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார். அரசாங்கம் மிகப் பலம்பொருந்தியதாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஏனைய கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியமோ தேவையோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு மேலும் மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்ள விரும்புவதாகவும், ஆளும் கட்சி அசைக்க முடியாத பலத்தைக் கொண்டிருப்பதாகவும் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார்.
Post a Comment