இலங்கையர், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய 220 மில்லியன் ரூபாவை மோசடி செய்த பேராசிரியர்
220 மில்லியன் ரூபா மோசடி செய்த கணனி பேராசிரியர் ஒருவருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கையர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைத்த பணத்தை, கணனித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹர்ஷ கயான் மங்களநாத என்ற கணனித்துறை பேராசிரியரே இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருக்கு உடந்தையாக செயற்பட்ட மேலும் இரண்டு பேருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கணனி மற்றும் செய்மதித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment