2014ஆம் ஆண்டும் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்கள் தொடரும் - ஜனாதிபதி மஹிந்த
நாடளாவிய ரீதியில் 2014ஆம் ஆண்டும் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கேட்டறியும் நிகழ்வு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, தமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு, மேலதிகமாக புதிய பல அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Post a Comment