Header Ads



2000 ரூபா போலி நாணய தாள்களை, எப்படி அடையாளம் காண்பது (படம் இணைப்பு)


(Sfm) இரண்டாயிரம் ரூபா போலி நாணய தாள்கள், சுமார் 10 லட்சம் ரூபா வரையில் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான போலி நாணய தாள்கள், நேற்று பேருவலை அரச வங்கியில் கண்டு பிடிக்கப்பட்டது.

இவ்வாறாக மீட்கப்பட்ட போலி நாணய தாள், மாலபே பொத்துஅராவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெறப்பட்ட போலி நாணயதாளுக்கு ஒத்ததென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருவலை, பொல்கொடுவ பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரினால் வங்கியில் வைப்பில் இடப்பட்ட நிலையில், வங்கி பணியாளரினால் அவை போலி நாணய தாள் என கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த வர்த்தகர் மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த தினத்தில், மாலபே பொத்துஅராவ பிரதேச வீடொன்றில் இவ்வாறான போலி நாணயதாள் அச்சிடுவது கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.