இணையதளங்களை கண்காணிக்க 20 லட்சம் சைபர் கிரைம் போலீசார் - சீனா அதிரடி முடிவு
சீனாவில் அரசுக்கு எதிராக இணையதளங்களில் ஏராளமானோர் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். மேலும், அரசு வெப்சைட்களில் ஊடுருவி ரகசியங்களை திருடுகின்றனர். இந்நிலையில், சீனாவில் ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார குழு சார்பில் இணையதளங்கள் மற்றும் ஊடகங் களை கண்காணிக்க 20 லட்சம் சைபர் கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரசார குழு தலைவர் கூறுகையில், மக்கள் மத்தியில் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையிலும், தொடர் ந்து சீன இணையதளங்களில் நடைபெறும் ஊடுருவல்களை தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாள்தோறும் இணையதளங்களில் பதிவு செய்யப்படும் பிளாக்கர்களின் செய்திகளை ஆய்வு செய்வது, டுவிட்டர், சீனாவெய்போ போன்ற சமூக இணையதளங்களை கண்காணிப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுவர். மேலும் அவற்றில் பதிவு செய்யப்படும் கருத்துகளையும், செய்திகளையும் ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்புவர் என்றார்.
இதன் மூலம் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்பவர்களை கண்டறிந்து கண்காணிக்க முடியும். சீனாவின் முக்கிய தகவல்கள் வெளிநாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபடுவார்கள். சீன இணையதளங்களை ஊடுருவி தகவல்களை திரட்டியதாக அமெரிக்க உளவு நிறுவனம் எப்பிஐ.யின் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் வெளியிட்ட தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment