19,20,26 ஆம் திகதிகளில் இஸ்லாமிய தீனயாத் (தர்மாச்சார்ய) பரீட்சை
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் இஸ்லாமிய தீனயாத் (தர்மாச்சார்ய) மற்றும் கத்தோலிக்க மறைப்பாடசாலை இறுதிப் பரீட்சைகள் இம்மாதம் 19ஆம், 20ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்படிப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் மேற்படித் திகதிகளில் இடம்பெறவிருப்பதாகவும் மேலதிக தகவல்களை 0112785230 என்ற தொலைபேசியூடாகவோ அல்லது 0112784232 என்ற தொலை நகல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய தீனயாத் (தர்மாச்சார்ய) பரீட்சை ஒக்டோபர் 19,20 மற்றும் 26 ஆகிய திகதிகளிலும். கத்தோலிக்க மறைப்பாடசாலை இறுதிப் பரீட்சைகள் ஒக்டோபர் 19 மற்றும் 20ஆம் திகதிகளிலும் நடைபெறவிருக்கின்றது.
Post a Comment