16 வயதான் டுபாய் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இலங்கையருக்கு சிறை
(Tm) வயது குறைந்த டுபாய் பிரஜை ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்று சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜையொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்தே அவர் இந்த குற்றத்தை புரிந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் டுபாய் பிரஜையின் தந்தையே கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். ஹோட்டல் குளியலறையில் வைத்தே 16 வயதான தன் மகன் மீது சந்தேகநபர் இந்த குற்றத்தை புரிந்ததாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை ஹோட்டல் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகநபரை தங்கள் பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்து கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பகுதியைச்சேர்ந்த மேற்படி சந்தேகநபரை கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பொலிஸார் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை நவம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இப்படிப்பட்டவர்களுக்கல்லாம் சவுதி அராபிய போன்ற நாடுகளைப்போல் மரண தண்டனை கொடுக்க வேண்டும். இலங்கையில் தொடராக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் நடந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறான குற்றங்களுக்கு உலகில் உள்ள அரசாங்கங்கள் இஸ்லாமிய சரியாத் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், இஸ்லாமிய சரிஆவை பின்பற்றினால் நமக்கு இழுக்காக போய்விடும் என்று சிதிக்கிறார்கள் .அனால் என்றைக்கு உலகத்தில் இஸ்லாமிய சரிஆவை பின்பற்றி சட்டம் கொண்டுவந்து ,நடைமுறைப்படுதோ, அன்ரைக்கித்தான் இவ்வாறன மனித இனம் வெறுக்கக்கூடிய அல்லாவால் சபிக்கப்பட்ட வெட்கக்கேடான அருவருப்பான சம்பவங்கள் உலகில் நடக்காது .இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் ஈசா (அலை )வந்தவுடன் இஸ்லாமிய சட்டம் நடைமுறைக்கு வரும்
ReplyDelete