மாத்தளையில் மீட்கப்பட்ட 154 எலும்கூடுகளின் மாதிரிகள் சீனாவுக்குச் செல்கிறது
மாத்தளை பொது மருத்துவமனை வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் எந்த காலப்பகுதிக்குறியது என்று அறிய வெளிநாட்டுக்கு அனுப்புமாறு மாத்தளை நீதவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.
குறித்த மனித புதை குழியில் இருந்து 154 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் 6ஐ சீனாவின் பீஜிங் நகரத்தில் அமைந்துள்ள இரசாயன ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் வைத்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே, குறித்த மனித எலும்புகள் தொடர்பில் விசேட சோதனைகள் இடம்பெற்று வருவதாக நீதிமன்ற மருத்துவர் நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி மாத்தளை பொது மருத்துவமனை வளாகத்தில் கட்டட வேலையின் பொருட்டு குழி தோண்டப்பட்ட நிலையில் இந்த மனித புதை குழி கண்டுப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment