புகைப்பிடிப்போருக்காக அரசு 150 இலட்சம் ரூபாவை செலவிடுகிறது - சுகாதார அமைச்சர்
புகைப் பிடிப்பதன் விளைவாக ஏற்படும் நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக 144 முதல் 150 இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டாலும் கடைசியில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களே அதிகமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
இதன்படி ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 50 தொடக்கம் 60 பேர்வரை புகைபிடிப்பதனால் ஏற்படும் வெவ்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக அரலங்வில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் எவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் ஆய்வு அறிக்கையின்படி ஒரு வருடத்தில் 20 ஆயிரம் பேர்வரை புகைபிடிப்பதினால் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் ஒரு நாளைக்கு ஆயிரத்து இருநூறு குழந்தைகள் பிறக்கும் போது அதில் ஆயிரம் பேர் இறக்கின்றனர், அதிலும் நூற்றுக்கு 60 வீதமானோர் தொற்றõநோய்களான புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அதிகமானவர்கள் புகைபிடித்து புற்றுநோய்க்கு ஆளாகியே சிகிச்சை பெற்று வருகின்றனர். வாய், வயிற்றுப்புற்றுநோய்க்கான ஒரு தடுப்பூசிக்காக 3 இலட்சம் ரூபா வரை செலவிடப்படுகின்றது. வருடத்திற்கு ஒரு நோயாளிக்காக 144 முதல் 150 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நான்கு வாட்டுகளில் 35 முதல் 40 வயதிற்கும் இடைப்பட்ட வயதினர் புகைபிடித்தின் விளைவாக நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றமை மனவேதனைக்குரிய விடயமே என்றும் தெரிவித்தார்.
Post a Comment