15 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவு செய்த அரசியல்வாதிக்கு 7 வருட சிறை
(Adt) பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ரட்ணசிறி கலுப்பெருமவிற்கு 7 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை இன்று (23) பிறப்பித்துள்ளது.
15 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவு புரிந்ததாக பிரதேச சபை உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிற்கு 6 லட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பிரதேச சபை உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Post a Comment