Header Ads



குடிசைகளற்ற கொழும்பை உருவாக்கும் நோக்கில், 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம்

(எம்.எம்.ஏ.ஸமட்)

கொழும்பு மற்றும் கொழும்பின்; புறநகர் பகுதிகளில் 68 ஆயிரத்து 812 கும்பங்கள் வசதிகளற்ற குடிசைகளில் வாழுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றையொற்றி, இன்னும் இரு வருடங்களில் குடிசைகளற்ற கொழும்பை உருவாக்கும் நோக்கில, குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக  14ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

மஹிந்த சிந்தனையின் அபிவிருத்தித்திட்டத்திற்கமைய, வசதி வாய்ப்பற்ற குடிசைகளில் வாழ்வோருக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கையளிக்கும் பொருட்டு இத்திட்டத்தின் முதற்கட்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள 500 வீடுகள்  எதிர் வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்த தினத்தன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளன. நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்படவுள்ள இவ்வீட்டுத் திட்டத்திற்கு மிகிந்து சென்புர எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்னும் இரு வருடங்களில் கொழும்பையும் அதன் புறநகர் பிரதேசங்களையும குடிசைகைகள் அற்ற நகராக மாற்றும் இத்திட்டத்தின் போது நிர்மாணிக்கப்படும் 14 ஆயிரம் வீடுகளில் ஒவ்வொரு வீடும் 400 சதுரை அடி பரப்புக் கொண்;ட 2 படுக்கை அறைகளையும் ஒரு வரவேற்பறையையும், குசினி, குளியறை மற்றும் பெல்கனியையும் கொண்டதாக அமையும்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபா ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இவ்வீட்டுத்திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பிரதேசங்களான ஹேனமுள்ள, அலுத்மாவத்தை, பேர்கியூசன் வீதி, சிறில் சீ பெரேரா மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, மாளிக்காவத்தை, தெமடகொட போன்ற 18  பிரதேசங்களில் இந்த வீட்டுத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருமானம் குறைந்த  குடிசைகளில் வாழ்வோருக்கு கைளிக்கப்படவுள்ளன.

இவற்றின்; மூலம் இன்னும் இரு வருடங்களில் குடிசை வீடுகள் அற்ற கொழும்பைக் காண முடியுமென நகர அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.